Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

இனிய நீயும் நானும்

மூக்கின் நுனி
முதலாம் கனி;

பூவின் மடல்
பூவை உடல்;

ஈர முகம்
தீரா சுகம்;

பட்டுத் துணி
ஈரிமைகள் இனி;

பெண்ணின் விழி
வெள்ளிப் பனி;

மடியில் நானும்
மனதில் நாணம்;

மோக முத்தம்
யாக வெப்பம்;

தென்றல் வீசும்
தோள்கள் பேசும்;

தேன் சுரக்கும்
நா மணக்கும்

ஊமை கழுத்து
உயிர்மெய் எழுத்து;

சங்கின் தன்மை
விழியின் வெண்மை;

பேசும் புருவம்
கூட்டும் கர்வம்;

நெற்றித் திலகம்
அழகின் கழகம்;

மேக மெய்கள்
சேரும் கைகள்;

முனகள் சத்தம்
மூச்சின் சந்தம்;

பற்கள் பதியும்
பாதம் அதிலும்;

முன்னும் பின்னும்
முறிந்திட சொல்லும்;

இதழ்கள் தவழும்
இடையும் துவளும்;

வார்த்தை போதும்
வார்த்தாய் யாதும்;

இனிய

நீயும் நானும்
வானின் கானம்.

மூச்சு!

அருகினில், நீ அமர்கையில் வாங்கிடும் மூச்சிற்கு
இருதுளை நாசிதான் எப்படி போதும், என் சுவாசமே?

தேகம் முழுதும்,
தோல் துவரங்கள் சில இலட்சமும்
சுவாசிக்கும் மனித தவளையென நான் மாறினும் தான்
எப்படி போதுமடி?


மூச்சும் ஓர் புறம் திணறிட,

என்னில் அடங்கிய,
எண்ணில் அடங்கா நரம்புகள்
பிண்ணிய தோரனயில் என் தேகம்
அசைய மறுத்து தான் அங்கேயே
கிடந்திடுமே,
- உயிர் சடலம்.

ஒரு வழியாய் நானும்
சுயம் அறியும் முன்னே,

உன் தேகம் தீண்டியதொரு தென்றல்
எனையும் தழுவிட,
உறைந்திடாது எப்படி ஓடிடும் உதிரம், என் உடலினில்.

மூளைக்கும் பய்ந்திடுமோ ஓர் துளி? இனி மெல்ல,
நினைவுகள் நழுவிட, மெதுவாய்
கண்களும் சொருகிட, நானும்
மயங்கியே விழுந்திட, கொடுப்பாய்
உன் மடியினை.

ஒளி தா!

சூரிய உலையில் சிலிகானும் உபரியும் உருக்கி
அண்டம் கொள்ளா பந்தினை படைத்தான்
கண்ணாடி பந்தினை படைத்தான்.

பல கோடி நூறாண்டுகள் கையினில் தாங்கி
தானே தன் கையால் பட்டையும் தீட்டி
பாரில் இல்லா பளபளப்பும் பூசி, ஒளியும் சேர்த்தான்,
மின்னிடும் ஒளியும் சேர்த்தான்.

வெற்று வானில்,
பல ஒளிஆண்டுகள் தொலைவில்,
சிறு கதிரும் தப்பிடா இருளினில்,
தனிமையில்
மின்னும் பந்திற்கோர் வண்ணம் சேர்த்தான்,
கரிய ஓர் வண்ணம் சேர்த்தான்…

கருவினில்,
நீ தோன்றிய பொழுதினில்,
உன் விழியினில்
அதைப் பதித்தான், படைத்தவன் உன்
விழியினில் அதை பதித்தான்.

அவன் தன் கைவண்ணம் நான் வியக்க வேண்டி, முன்னே,
என் கண் முன்னே உனையும் நிறுத்திச் சென்றான்;

பார்த்தேன்; புகழ்ந்தேன்.
அவன் திறன் புகழ்ந்தேன்.

’அருகினில் சென்று
ஆராய்வாய்!’ என்று
ஆசையும் தூண்டிட, நெருங்கினேன்,
அருகினில் நெருங்கினேன்.

அகில பிரபஞ்சமும்
அதிலேச் ஓர் புள்ளியும்
என எனையும் காட்டிற்றே!
உன் விழி தான் எனையும் காட்டிற்றே.

உறைந்தே, சிலை என நான் நின்ற நேரம்,
இமை திரை வீழ்த்தி விழியினை அடைத்தாய்,
என் உலகமே!
அந்நொடி முதல் என் உலகமே இருண்டதே.

இருளினில் இன்றும், இன்னல்கள் கொள்கிறேன்,
விழியினை நீயும் என்றடி திறப்பாய், தீபமே, என்
சிறு உலகும் மீண்டும் ஒளி பெற?

பதில் கடிதம் தொடுப்பாய்!

மணிக்கொரு கடிதம் மனதினில் முடித்து;
செல்லும் இடமெல்லாம் அதை தான் சுமந்து
நீ இல்லா இடம் எல்லாம் இருப்பதாய் நடித்து
வருடங்கள் பல கொடுத்தும் வந்தேன், என் கவியே!
நீ என்று பதில் கடிதம் தொடுப்பாய் என்றே!

வெகு நேரம் எனக்கில்லை உனைப் பிரிய!


வீழ்ந்திடும் ஒவ்வொருத் துளியுடன் நீயும்,
கரைந்துச் செல்வதைக் கண்டு மேலும்,
பொங்கும் கண்ணீரை நானும்
என் செய்து நிறுத்து வேனோ?

பால் மழைப் பொழிந்து,
துளி பொழுதில் உறைந்து,
மண் மொத்தமும் மறைந்து,
தேகம் முழுதும் குளிர்கையில்,
தோளில் சாய்ந்து உறங்கினாய்,
தூக்கம் என்று மயங்கினாய்.

மழையும் பொழியவில்லை,
குயில் கூச்சல் புரியவில்லை.

சலனமின்றி விழித்தேனே,
உன் உறக்கம் கண்டு வழிந்தேனே!

கால் முளைத்த காலம் அங்கேயே
முடமாய் போய் இருக்க கூடாதா?

வேகம் கொண்டு நேரம் ஓடியும்,
உன் தேகம் மட்டும் அசையாது அமைந்ததுவே!

கதறிக் கதறி அழத் துடித்தேன்,
ஊமையாய் ஏனோ நெஞ்சைப் பிடித்தேன்.

தடிப்பிடித்து அடி எடுத்து வைத்திடும் கிழவன் விடுத்து
ஏன் சென்றாய் நரை முடிக் கிழவியே?

எனக்கென நிகழும் எக்காரியமும்,
உன்னுடன் ஒன்றாய் நிகழ்ந்திடவே,
உடன் நானும் விழுந்தேனே,
கனவுக் கலைந்து எழுந்தேன!!!

நிகழா அனைத்தும் நிகழாதே போயினும்,
சத்தமின்றி கண்ணீரும் கண்ணத்தை நனைத்திட,
வீழ்ந்திடும் ஒவ்வொருத் துளியுடன் நீயும்,
கரைந்துச் செல்வதைக் கண்டு மேலும்,
பொங்கும் கண்ணீரை நானும்,
என் செய்து நிறுத்துவேனோ?

மீண்டும்...

உன் விழி கண்டு,
ஊமை இதழ் நின்று,

சுவைக் கவியும்,
மெல்ல அவிழும்.

உன் நடைக் கண்டு,
அன்னப் பேடை ஒன்று,

நெழியும்,
தயங்கி நெழியும்.

உன் மொழிக் கேட்டு,
என் வீட்டுக் கிளிப் பாட்டு,

முடியும்,
அன்றுடன் முடியும்.

வரும் வழி பார்த்து,
நீ வரும் வழி பார்த்து,

நிறையும்,
வண்ணப் பூக்கள் நிறையும்.

மிதிப்பட்டு,
உன் பாத விரல் பட்டு,

விரியும்,
அதில் சில மொட்டு விரியும்.

இத்தனையும் பார்த்து,
கண் பார்த்து,

சரியும்,
என் மனம் மெல்ல சரியும்... :)

நெற்றியில் ஓர் துளிச் சொட்டியதே!

LOVE :)
அந்நாந்து பார்க்க யானும் முடியாமல்,தலை
குணிந்து பார்க்க தானும் முடியாமல்,
முகிலினங்கள் முகம் உரச, உயர்ந்து
நிற்கும் மரம் தன்னின் கிளையில் நின்று,

இறந்த பின்னும் தற்கொலைச் செய்யும்
எண்ணம் கொண்டு,
குதித்திடும் காய்ந்த இலைகள் மீதும்,
அவை உறங்கும் மண் துகள்கள் மீதும்,

பாலில் குழைத்த மஞ்சளினை மெதுவாய்
மெது மெதுவாய்,
தன் விரல் கொண்டுச் சூரியன்,
பூசிக் கொண்டிருந்த மஞ்சள் மாலைப் பொழுதினில்,

மணக்கும் மலர் தோட்டத்தின் மத்தியில்,

ஓர் மரத்தின் நிழலில் நீயும்,
நின் மடியில் நானும்;

வார்த்தைகள் வற்றிய வாய்கள் ஓய்ந்திருக்க,
இணை விழிகள் இமையாது,
உறைந்து கிடந்தேனே.

வழிப்போக்கன் என்று யாரும் இல்லை,
விழி(க்) கெட்டும் தூரம் எவரும் இல்லை.

சுற்றிலும் தனிமை தவழ்நது திரிய,
ஒற்றை வார்த்தை பேசாமல் அழகாய்,
மிக அழகாய்,
நீயும் சிரித்தாய்;

'நீ சிரிக்கிறாய்; வேறு காரணம் தேவையா?’,
உடன் நானும் சிரித்திருந்தேனனே !




சட்டென்று, நெற்றியில்
ஓர் துளிச் சொட்டியதே!



அதிகாலை மேகம், வாசல் தெளித்த
மழைத்துளிச் சேர்த்து,
நாம் இருவரும் வனம் வரும், நேரம் பார்த்து,
கிளை மேல் வந்து ஓர் கிளி அமர,
தலை மேல் தெளித்த மரம் அது மென்மேலும் வளர்க! வளர்க!

மனம் முழுக்க இனிக்கும் என் மன மகளே !

என் நெற்றியில் சொட்டிய நீரைக் கண்டு, கைக்
கட்டி நீயும் இருப்பதெப்படி?

உன் சேலையின் ஓர் ஓரம் பிடித்து,
என் நெற்றியின் ஈரம் துடைத்தாயே !

அதிகாலை முதல் அந்நேரம் வரை,
உன்னைச் சுற்றியிருந்தச் சேலையின்
ஓர் நுணி,
என் மீது, பட்டதே ! ஹய்யோ !

ஓ மரங்களே!

ஓர் துளி நீர் தான் உங்களால் முடிந்ததா?

ழ் கடல் கொணர்ந்து என் மீது கொட்டுங்களேன்...

கல் ஒன்றைக் கட்டி, என் இதயத்தை
மொத்தமாய் தூக்கி எறிந்திடுவேனே, மூச்சுத் திணறாத
பேரின்ப கடலினிலே !

காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்


விழித்துக் கொண்டு தானே இருந்தேன்,
உனை பார்த்த படியே!

இருந்தும் கவனிக்க மறந்தேன்,
எனை நோக்கி பறந்து வருவதை.

என் செவி துவாரத்தில் நுழையும் முன்
படபடத்த அதன், கண்ணாடிச் சிறகுகளின் சத்தம் மட்டுமே நான் அறிந்தேன்.

உடலை நெழித்து, செவிச் சுவர்களை அழுத்தி,
உள்ளே நுழைந்த பின்,

இருளில் தொலைந்து தடுமாறி,
தொண்டை குழியில் இடறி விழுந்து மறித்தும் போனதே, பாவம் !

முடிந்ததென நினைத்தேன்.

ஆனால்,
அதன் பிரேதம்
என் எச்சில் ஆற்றில் அடித்துச் செல்லப் படுகையில்,

சட்டென்று வெடித்ததில்,
கண்ணுக்கும் புலப்படாத சில நூறு சிறு துகள்கள் வெளியேறின.
அவை என்னென்று அந்நொடி அறிந்திலேன்.

பாலை ஒன்றில், தொலைவில் மணலைச்
சூரியன் முத்தமிடும் மாலை போலே, சிவந்திருக்கும்

இதய நிலத்தில்,
அத்துகள்களும் விழுந்தனவே.

இருண்ட இதயம் எனதே,
பார்வையால் விழி வழியே ஒளியும் அனுப்பினாய்.
ஒளி கிடைத்தது.

வறண்ட இதயம் எனதே,
புன்னகைத்தாய், எதிர் வீட்டு குழந்தையை கொஞ்சிட,
புயலோடு மழையும் தந்ததே,
நீர் கிடைத்தது.

வேரென்ன வேண்டும் இதற்கு மேல், சிறு வேர் விட்டு
சில நூறு பூச்செடிகள் மெல்ல முளைத்தனவே.

வெளி மணம் ஒன்றும் தெரியவில்லை,
மனம் முழுக்க பூக்களின் மணமே...
மூச்சு திணறிற்று; மூளை மயங்கிற்று.
தினம் நூறு பூக்கள்,
பூக்கும், தூங்கும்
வாட்டம் அறிந்ததில்லை அவை.

இனித்திருந்தேன், இனி என்ன தேவை எனக்கு,
இது போதும்,
இது போலும் இன்பம் வேறேது?
இயல்பில் இத்தனை சுகம் சாத்தியம் என்று நினைத்ததும் இல்லையே.
இன்பம் இன்பம் இன்னும் பொங்கும் இன்பம் இன்பம்...





புயல் ஒன்றும் வந்ததோ அறியிலேன். ஆனால்,
இதயம் நனைவதாய் மட்டும் நான் உணர்ந்தேன்.

மழை அல்ல. இது, மழை அல்ல.

வேருடன் நீ பறித்துச் செல்கையில்,
பாவம், வாய் பேசா பூக்கள் கண்ணீர் மொத்தம் சிந்தினவே.

நீ விதைத்தினால் நீயே பறித்துச் சென்றாயோ?
என் காதல் பூக்களை வேருடன் சேர்த்து...

நியாயம் தான். நீ செய்ததினால் இதுவும் நியாயம் தான்.

செடி ஒன்றை வேருடன் பிடுங்கிட நிலமும் என்னாகுமோ?
அதுவாய், என் இதயமும் புண்ணானதே.

சில நாட்களில் அதுவும் மறைந்திட எல்லாம் மறந்திடும் நம்பியிருந்தேன்.

சட்டென்று ஓர் நாள்,
ஏனோ என் இதயம் உறுத்திற்று,
என்னென்று நானறியேன். அறிவதும் ஏன்?

கவனிக்க நானும் நினைக்கலையே,
பூச்செடிகளின் நிலத்தில் சில முட்செடிகள் முளைத்தனவே.

இதயத்தினின்று வெட்டி எறிய இனியும் தெம்பில்லே,
விட்டு வைத்தேன், கட்டுபடுத்த நானும் முடியாமலே.

காலம் மெல்ல கரைய,
காட்டு தனமாய், முட்களும் வளர,

இதயம் கடந்து,
மேலும் கீழும், முன்னும் பின்னும்,
ஒன்றும் ஒன்றும் இரண்டென்று விரல் விட்டு எண்ணும் நொடிக்குள்,
உள்ளடங்கிய கிளைகள் என் சதை எல்லாம் கிழிய சுதந்திரமாய் விரிந்தனவே.

இரத்தம் சொட்ட சொட்ட...
இல்லை,
இரத்தம் கொட்ட கொட்ட,
என் கிழிந்த சதையும், குருதி தோய்ந்த தோலும்,
முட்களிலும், கிளைகளியும் அங்கங்கே ஒட்டி தொங்கினவே.

வேதனை இல்லை; வேதனை இல்லை.
வலி என்னை கொல்ல,
உயிர் மட்டும் ஏனோ வெட்கம் இன்றி தங்கியதே...

கிழிந்த இதயத்தில் மீண்டும் அதே வண்டு வந்து விதை தூவிடும் நம்பிக்கையோ...
காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்...

கோவணம் ஜொலிக்குது !!!


கட்டிடம் என்று கட்டி, அதனுள்
கட்டம் ஒன்று கீறி,
நீ மட்டம், மணக்கும் என்
மலம் மட்டும் என்றுச்
சட்டைப் போடாதான் ஓர்
சட்டம் போட்டே நம்மை எட்ட நிறுத்துறான்...

ஏன்டா!!
மும்பை மாடல் அழகி அளவிற்கும் உங்கள்
சாமிக்கு தமிழ் தெரியாதா?
பிறகு எதற்கடா ‘எல்லாம் அறிந்தவன்
அவன் ஒருவனே’ என்று பொய் பிரச்சாரம்?

தானே தெய்வமாக,
தன் மொழியே தெய்வ மொழியாக,
சூழ்ச்சி செய்தவனின் சொல்லுக்கு
கூட்டத்தோடு கூட்டமாய் தலை அசைத்த என்
முன்னோர் மூவாயிரம் பேராயினும்,
அத்தனை பேரையும்
சுட்டெரிக்கும் சினம் என் எட்டு முதல் கொண்டேன்...

நாளொறு கோவில் இங்கு முளைக்குது,
மூளை முடுக்கெல்லாம் இவனுங்க பாட்டு தான் ஒலிக்குது.
திருவிழான்னு தெருவெல்லாம் இவங்க கோலம் தான் நிறைக்குது,
வழி கேட்டா கோலம் போடுற பொம்பல முரைக்குது;


சாமி கோவணம் ’தக தக’னு ஜொலிக்குது, பூமியில
எத்தனையோ குடிசைக் கூரை பல் இளிக்குது...

இதெல்லாம் சொன்னாலும்,
எவனுக்கு தான் உறைக்குது?

அத்தே!!


தேகம் நொந்து,
சோகம் பலக் கொண்டு,
வருடம் ஒன்று முழுதாய் முடிய
இரு மாதம் இன்னும் குறைய,
சுமந்தாய், உன் வயிறுடன் மனதும் நிறைய.

சொல்லில் அடங்கா பிணிக் கொண்டு ஈந்தாய்,
அது வரை மண்ணில் இல்லா அழகு மகள் இவளை.

ஒரு முறை நீ சுமந்தாய் அவளை, போதும்.
இனி தினம் தினம் நானே சுமப்பேனாம்.

பிணிப் பற்றி பயம் வேண்டாம்,
சூரியனும் பனியும் போலே, அவள்
சிரிப்பும் என் தவிப்பும்;
எதிரெதிர் நிற்கையில் சலனமின்றி உறுகியே ஓடிடுமே.

இனியும் உனக்கு கவலை வேண்டாம் அத்தே,
என் உயிர் பிரியும் வரை அவள் கண்கள்,
கண்ணீரை கண்டிடாதே!!!

இதழ் முத்தம்




தன் எச்சில் தரை விழுந்தால்
தீண்டாத மனித நாகரிகத்தில்
இதழ் முத்தம் என்றும் வியப்பே !!!

//இதழ் முத்ததுக்கே வியப்பா’னு கேட்டுடாதீங்கோ!!!

பூமியும் ஓர் தேவதாசனோ??


காடென்னும் தாடி வளர்த்து, விழியில்

கடலெனும் கண்ணீர் சுமந்து,

ஓசோன் (ozone) சட்டை கிழித்துக் கொண்டு,

நிலவெனும் நாய் குட்டி தன்னை சுற்ற,


அல்லும் பகலும் போதையிலே
சுற்றிடுதே...

உன் பாதம் தீண்டும் சுகம்


காற்றில் மிதக்கிறேன்,
நீரில் நடக்கிறேன்,
நெருப்பில் நனைகிறேன்,
குடை பிடித்தும் மழையில் கரைகிறேன்...
குழப்பத்தில் ஏதும், புரியாமல் திரிகிறேன்...

’பட்டு’ என்றுன்னை அழைக்கிறேன்,
விட்டு எனை நீ நீங்கினால் அழுகிறேன்.

தொட்டுக் கொண்டு நகரும் நம் நிழல் கண்டு,
கொட்டும் இன்ப அருவிச் சுமந்த்து, நடக்கிறேன் நானும்,
உன் விரல் மெல்ல பற்றிக் கொண்டு.

உன் பாதம் தீண்டும் சுகம், தரைக்கு தரவும் மாட்டேன்,
உள்ளங்கை விட்டுன்னை இறக்கி விடவும் மாட்டேன்.

கள்ளம் அறியாதவளே, என்
உள்ளம் புரிந்தவளே!!!

சுகம் பல நீயும் கொள்ள,
தினம் தினம் நான் மகிழ்வேனே...

சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய்


புதியதோர் உலகம்,
சுற்றிலும் வெள்ளாடை மானிட கூட்டம்,
முகத்திரையும் கையில் உரையும் அணிந்தோரை பார்த்து,
பயந்து போனதோ என்னவோ!? பாவம்!!

உலகம் முழுதும் எதிரொலிக்க, அழுதுக் கொண்டு, ஓர்
உயிர் மண்ணில் தோன்றிற்று;

சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய் என்று நிரூபித்தது ஓர் பூவையின் பிறப்பு.


முதல் முறை பார்க்கையில், அன்னையும் அந்நியமே!

குழப்பத்துடன் பார்திருக்கையில்,
அவள் தன் பட்டு மேனியும், பஞ்சு
விரல்களும் பிடித்து,
மகிழ்ச்சி கடலில் மூழ்கினாள்.

எனக்கும் கிடைத்திடாத வரம்,
உண்மையில் அவள் தாய் தவம் செய்தவள் தான் போலும்!!!

காயங்கள், எல்லாமே சுகமாகும் மாயங்கள்

Love Rose


அழகிற்கு எல்லை,
என்றொன்றும் இல்லை - என்றே
உன்னைக் கண்ட பின்னே,
எவரும் சொல்லிடுவார் பெண்ணே!!!

வாள் கொண்டு நீயும்
என் இதயம் தன்னைக் கிழிப்பாய்; பின்,
நீ சிந்தும் கண்ணீர் கண்டு, என்
வெட்டுண்ட இதயமும் துடித்திடுமே!
உடன் கண்ணீர் வடித்திடுமே!

நீ செய்திடும் காயங்கள், எல்லாமே
சுகமாய் போகும் மாயங்கள்!!!

What Say You ?




Never had I a thought of cry,
Dear !!! my eyes are already dry;

Never have I shed tears,
Dear !!! I really miss u after years;

Never have I felt so alone,
Dear !!! make me Re-born with a call of the phone;

Never have I seen even right as right,
Dear !!! you showed me to heaven where anything is alright;

Lets start a life so NEW,
Dear !!! What say you???

பிரிவில்லை நெஞ்சமே!!




வெகு நாள் நான் உனைக் கண்டாகுதடி,
நீ இன்றி என் ஜீவன் சாகுதடி;
வெகு நாளாய் உன் நிழல் அது தீண்டாது, நெஞ்சம்
எனது மாண்டது!!

சுடுகாடும் சுகம் தான் உன்
சுண்டுவிரல் என்னை சூழ்ந்திடும் நொடி.

தித்தித்திடும் வேப்பஞ்சாறும் உன் திருக்
கரங்கள் தீண்டினாலடி;
எத்திக்கும் சுவைக் கசியும் தீந்தேனும், துளி
கசக்குதடி, இதயத் துடிப்புணரும் தொலைவில் என் இனியவள்
இல்லாததாலே...

உன் விரல் பற்றியிருக்கும் நொடி
சூரியனும் என்னை சுட்டதில்லை,
விலகி நீ நின்றாய் பெண்ணே! இங்கு,
குளிர் புனலும் எனக்கு கொல்லியிடுதே!!

சுவாசம் குளிற
உன் வாசம் தாராயோ, மென் தளிறே !!!

உன் வாசத்திற்காகவே சுவாசிக்கும் எந்தன் நெஞ்சம் தான்
நீ அறியாயோ கண் மலரே ?

விரியும் இளந்தளிரும் - நானும்



பார் மயக்கும் இசைப் படைக்கும்,

புல்லாங்குழலும் பூங் குயிலும்,

இதழ் மலர்ந்து நீ உதிர்த்திடும் ஓர் வார்த்தை போலே

யுகம் கடந்து, என்னுள் எதிரொலித்திடாதே...



மேகம் நழுவி விழும் முதல் துளி,

மண் தொடும் முன்னே, பெண்ணே உன்

கண் பார்த்திடும் வரம் ஒன்றே போதுமே...



தேகம் நடுங்கும் மார்கழிக் குளிரில்,

அதிகாலை பொழுதில், விரியும்

இளந்தளிரும் - நானும்,

உன் பாதம் படர்ந்த வாசல் கோலம் கண்டு,

ஞாலம் கடக்கும் காதல் கொண்டோமே...

வெள்ளை நிறத்தொரு வானம் கண்டேன்



வெள்ளை நிறத்தொரு வானம் கண்டேன், அதில்
கார்குழல் நிறத்தொரு நிலவும் கண்டேன்.

மெதுவாய் விழி நீ,
மூடும் பொழுதே தேய் பிறையாம், கண்
திறந்திடும் பொழுதும் வளர் பிறையாம்.

முழு நிலவொன்று தோன்றலும் மறைதலும்
உன் விழியினில் கண்டே வியந்து நின்றேன், நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு நொடியும்.

இத்தனை அழகும் பிரதி எடுத்தார் போல் உன் மறு விழியும் கண்டு
'பொத்'தென நானும் மயங்கி விழுந்தேனே,

கடற்கரையிலும்...
காதல் கரையிலும்...

மெழுகினில், அதன் ஒளியினில் !!

ஆறடிக் குழலும் என்னை
ஆட்கொள்ளும் அழகும் கொண்டு,

இருள் மிகு இரவினில், எனை
மறந்திடும் இனிய கனவினில் வந்தவளே -

விண்மீன் எல்லாம் தோற்றுப் போகும்
உன் விழி வழி ஒளி முன்னில்.

எனை மறந்து உறங்கத் துணிந்தேன்,
உடன் வந்து நீயும் அமர்ந்தாய்.

அருகினில் உன்னைக் கண்டேன்,
உறுகியே நானும் வழிந்தேன்.

மெழுகினில், அதன் ஒளியினில்,
உன் அழகிய விழியினில்,
அடைப்பட்டிட ஆசைக் கொண்டேன், அதற்காய்
ஆயிரம் முறையும் இறந்திட ஆர்வம் கொண்டேன்.



‘அழகு’ என்றே உனை அழைக்க நினைத்தேன்; அதற்க்குள்,
‘நிலவென்றே’ நீயும் மறைந்து போனாய் !!
புகையென நொடியினில் மறைந்தாய், வெண்-
புகையெனவே காற்றினில் கரைந்தாய்.

என்னென்று புரியாமலேயெ என்
கண்ணின்று நீர் வழிந்திடுதே.

பின், மெல்லக் கண் திறந்தேன்,
மெதுவாய் மெய் என்ன நான் அறிந்தேன்...

- நொடிப் பொழுதினில் கலைந்தக் கனவொன்று,
கோடி பொழுதுகள் நினைக்க வைக்குதே,
“உனக்காக எனக்குள் நான் வளர்க்கும் காதலினை”.