அருகினில், நீ
அமர்கையில் வாங்கிடும் மூச்சிற்கு
இருதுளை நாசிதான்
எப்படி போதும், என் சுவாசமே?
தேகம் முழுதும்,
தோல் துவரங்கள்
சில இலட்சமும்
சுவாசிக்கும் மனித
தவளையென நான் மாறினும் தான்
எப்படி போதுமடி?
மூச்சும் ஓர் புறம்
திணறிட,
என்னில் அடங்கிய,
எண்ணில் அடங்கா
நரம்புகள்
பிண்ணிய தோரனயில்
என் தேகம்
அசைய மறுத்து தான்
அங்கேயே
கிடந்திடுமே,
- உயிர் சடலம்.
ஒரு வழியாய் நானும்
சுயம் அறியும்
முன்னே,
உன் தேகம் தீண்டியதொரு
தென்றல்
எனையும் தழுவிட,
உறைந்திடாது எப்படி
ஓடிடும் உதிரம், என் உடலினில்.
மூளைக்கும் பய்ந்திடுமோ
ஓர் துளி? இனி மெல்ல,
நினைவுகள் நழுவிட,
மெதுவாய்
கண்களும் சொருகிட,
நானும்
மயங்கியே விழுந்திட,
கொடுப்பாய்
உன் மடியினை.
No comments:
Post a Comment