நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானோ??!

தூணிலும் இருப்பான்!

சிறு துரும்பிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு ,

ஏனடா வணங்குவதற்காக, 'சிலைகள்' வடித்தாய் ??????

முட்டாள் மானிடா!!!!....

உன்னிலும் இருப்பான்!

உன் கண்ணிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு,

ஏனடா கடவுளுக்காக, 'கோவில்கள்' கட்டினாய்??????

குருட்டு மானிடா!!!!..

ஒரு வேளை...

"நீ சொன்னதெல்லாம் பொய்"

என்று நிரூபிக்க தானோ??!!



கையில் ஆயுதம் ஏந்தி வாடி!!

கொள்கைகள் கொட்டிக் கிடக்குதிங்கு கோடி


கடைப்பிடிக்க ஒருத்தனும் இல்லை போடி;


உரிமை என்றால் உரக்க குரல் கொடுக்குறான்டி,


கடமை என்றால் கடையினில் ஓடி ஒழியுறான்டி;



ஈழத்தின் இடுப்பை ஒருவன் ஒடிக்குறான்டி,



தாயகம் திரும்புவோரை இவன் ஏளனமாய் நடத்துறான்டி;



நாளொரு கட்சி இங்கு தோன்றுதடி,



நாகரிகம் அறியாதவனெல்லாம் அதில் தலைவனான்டி;



ஆட்சியை அமைக்க ஆயிரம் சொல்லுறான்டி ,


அமைந்ததும் அதில் எதை இவன் செய்யுறான்டி?



அரசியல் உலகின் அடிப்படையாய் திரைத்துறையாச்சுதடி,


வருகிறவனெல்லாம் மக்களிடம் நல்லாவே நடிக்கிறான்டி...


வரி செலுத்த எல்லாரும் வரமாட்டேன்கிறான்டி



விலைவாசி விவசாயி முதுகெலும்பை முறிக்குதான்டி;



'கடவுள்' கதை சொல்பவன் கால்களில் விழுகிறான்டி,

சாதகம், சோதிடம்னு சிக்கி அழியுறான்டி;



எதையும் யோசிக்கவே யோசிக்கிறான்டி,


சோதிடனின் யோசனை மட்டும் யாசிக்கிறான்டி;



'மூடன்' என்றால் முறைக்குறான்டி

பகுத்தறி(வு) என்றால் பகைக்குறான்டி;

என்றும் இவன் திருந்தமாட்டான்டி



திருடர் கூட்டம் இவனை திருந்த விடமாட்டான்டி;


புதியதோர் உலகம் படைத்திட நீ வாடி!


திருடர் கூட்டம் தீயில் கருகிட,கையில் ஆயுதம் ஏந்தியே நீ வாடி!!!..