வெள்ளை நிறத்தொரு வானம் கண்டேன், அதில்
கார்குழல் நிறத்தொரு நிலவும் கண்டேன்.
மெதுவாய் விழி நீ,
மூடும் பொழுதே தேய் பிறையாம், கண்
திறந்திடும் பொழுதும் வளர் பிறையாம்.
முழு நிலவொன்று தோன்றலும் மறைதலும்
உன் விழியினில் கண்டே வியந்து நின்றேன், நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு நொடியும்.
இத்தனை அழகும் பிரதி எடுத்தார் போல் உன் மறு விழியும் கண்டு
'பொத்'தென நானும் மயங்கி விழுந்தேனே,
கடற்கரையிலும்...
காதல் கரையிலும்...
ரொம்ப நல்லா இருக்குங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
//மெதுவாய் விழி நீ,
ReplyDeleteமூடும் பொழுதே தேய் பிரையாம், கண்
திறந்திடும் பொழுதும் வளர் பிரையாம்.
//
அட அட என்ன்ம்மா ரசிச்சு எழுதியிருக்கீங்க
ரொம்ப பிடிச்சுருக்கு பாஸ்...!
@kamalesh
ReplyDelete-நன்றி...
@பிரியமுடன்...வசந்த்
- எழுதினத விட, நீங்க ரசிச்சு படிச்ச மாதிரி இருக்கே.. நன்றி...
fantastic............ awesome..... man you go places!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete