விரியும் இளந்தளிரும் - நானும்



பார் மயக்கும் இசைப் படைக்கும்,

புல்லாங்குழலும் பூங் குயிலும்,

இதழ் மலர்ந்து நீ உதிர்த்திடும் ஓர் வார்த்தை போலே

யுகம் கடந்து, என்னுள் எதிரொலித்திடாதே...



மேகம் நழுவி விழும் முதல் துளி,

மண் தொடும் முன்னே, பெண்ணே உன்

கண் பார்த்திடும் வரம் ஒன்றே போதுமே...



தேகம் நடுங்கும் மார்கழிக் குளிரில்,

அதிகாலை பொழுதில், விரியும்

இளந்தளிரும் - நானும்,

உன் பாதம் படர்ந்த வாசல் கோலம் கண்டு,

ஞாலம் கடக்கும் காதல் கொண்டோமே...

6 comments:

  1. on air music super boss

    இதுக்குரிய கோட் இருந்தா குடுங்களேன் இல்லைனா எங்க கிடைக்குதுன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  2. I dont have words to express my feelings when i read this poem.. marvelous!!!!

    ReplyDelete
  3. @பிரியமுடன்...வசந்த

    right now i don remember where i got it from... but when i find it , i'll link it to u..

    actually antha code inga copy panni pottaalum varala, am not that good in HTML :)

    or unga id sollunga, intha code send panren... :)

    Thanks


    @karthick ,

    Konjam ( illa nerayave )athigama thaan solreenga.. but still, thanks. :)

    ReplyDelete
  4. மிகவும் நன்றாக இருக்கிறது வினோ ரசித்தேன் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. @sarvan
    @கமலேஷ

    - நன்றி :)

    ReplyDelete