வெள்ளை நிறத்தொரு வானம் கண்டேன்



வெள்ளை நிறத்தொரு வானம் கண்டேன், அதில்
கார்குழல் நிறத்தொரு நிலவும் கண்டேன்.

மெதுவாய் விழி நீ,
மூடும் பொழுதே தேய் பிறையாம், கண்
திறந்திடும் பொழுதும் வளர் பிறையாம்.

முழு நிலவொன்று தோன்றலும் மறைதலும்
உன் விழியினில் கண்டே வியந்து நின்றேன், நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு நொடியும்.

இத்தனை அழகும் பிரதி எடுத்தார் போல் உன் மறு விழியும் கண்டு
'பொத்'தென நானும் மயங்கி விழுந்தேனே,

கடற்கரையிலும்...
காதல் கரையிலும்...

The Bucket List



-- "தாம் இறக்கப் போகும் தேதி முன்னரே அறிந்த இருவர், தாம் தவறவிட்ட இளமை காலக் கொண்டாட்டங்களை பட்டியலிட்டு அனுபவிக்கும், வாழ்வின் 'Climax' தருணங்கள்."

IMDB : http://www.imdb.com/title/tt0825232/

Torrent: Download Movie Torrent

The கம்பளி பூச்சி


மழலை தவழ்வது போல் மழை பொழுதில் ஊர்ந்துச் சென்ற ஓர் கம்பளி பூச்சி.

மெழுகினில், அதன் ஒளியினில் !!

ஆறடிக் குழலும் என்னை
ஆட்கொள்ளும் அழகும் கொண்டு,

இருள் மிகு இரவினில், எனை
மறந்திடும் இனிய கனவினில் வந்தவளே -

விண்மீன் எல்லாம் தோற்றுப் போகும்
உன் விழி வழி ஒளி முன்னில்.

எனை மறந்து உறங்கத் துணிந்தேன்,
உடன் வந்து நீயும் அமர்ந்தாய்.

அருகினில் உன்னைக் கண்டேன்,
உறுகியே நானும் வழிந்தேன்.

மெழுகினில், அதன் ஒளியினில்,
உன் அழகிய விழியினில்,
அடைப்பட்டிட ஆசைக் கொண்டேன், அதற்காய்
ஆயிரம் முறையும் இறந்திட ஆர்வம் கொண்டேன்.



‘அழகு’ என்றே உனை அழைக்க நினைத்தேன்; அதற்க்குள்,
‘நிலவென்றே’ நீயும் மறைந்து போனாய் !!
புகையென நொடியினில் மறைந்தாய், வெண்-
புகையெனவே காற்றினில் கரைந்தாய்.

என்னென்று புரியாமலேயெ என்
கண்ணின்று நீர் வழிந்திடுதே.

பின், மெல்லக் கண் திறந்தேன்,
மெதுவாய் மெய் என்ன நான் அறிந்தேன்...

- நொடிப் பொழுதினில் கலைந்தக் கனவொன்று,
கோடி பொழுதுகள் நினைக்க வைக்குதே,
“உனக்காக எனக்குள் நான் வளர்க்கும் காதலினை”.

The Bicyle thief (Ladri di biciclette ) - 1948


--- " 'Bicycle' இல்லாமல் வேலையும் இல்லை வாழ்க்கையும் இல்லை. அந்த 'Bicycle' ஐ முதல் நாள் வேலையில் பொழுதே திருடிய திருடனை, பாடுபட்டு, கண்டுபிடித்தும் ஏதும் செய்ய முடியாத ஓர் ஏழைத் தகப்பனின் கண்ணீர் கதை."

IMDB : http://www.imdb.com/title/tt0040522/

Torrent: Download Movie Torrent

வார்த்தை மீன்கள்

நீ அருகில் வருகையில் ஏனோ, என்

தொண்டை குழியில் வீழ்ந்திடும் நீர் வீழ்ச்சி தன்னில்

மாட்டி மடிந்திடும் வார்த்தை மீன்கள்,

என் காதலை நான் சொல்லிடும் முன்னே!!


ஜோதா அக்பர் - முழுமதி அவளது...

Movie : ஜோதா அக்பர்

Lyrics :

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை..
கசந்தது நிமிடம்.
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்,
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவள் அருகில் வருகிறாளென்று

காற்று கடத்திச் செல்லும் பொற்சிலை போல் திருமகள்,

பட்டினும் மெல்லிய அவள் கூந்தலை,

வீணை நரம்பென எண்ணி,

காற்றின் விரல்கள் மீட்டிட

தோன்றும் இசைக் கேட்டு என் நெஞ்சம் சொல்லும்,

தங்க ரதம், அவள் அருகில் வருகிறாளென்று...

இறகினும் மெல்லிய:

இணைவதற்காகவே இடைவெளிகளுடன்,
கை விரல்கள் -
உன் வெட்கம் மறைக்கும் திரைகள்.

‘யோகா’ பயிற்சி செய்தனவோ என்னவோ நானறியேன்,
உடல் முழுதும் வளைத்து சாகசம் புரிந்து,
உன் விரல்களிலும் கைகளிலும் இடம் பிடித்தன மோதிரமும் வளையளும்.

மயில்,
தோகை விரிப்பது போல்,
தானும் தோகை விரித்தாடும் மாட புறாவின்
சிறகில் இருந்து உதிர்ந்த,
இறகினும் மெல்லிய
உன் விரல் பிடித்த படி,கண்ணாடித் தொட்டிக்குள் முத்தமிடும் வண்ண மீன்களை
கண்டு கழிக்கும் நொடியினை எண்ணியே
நாட்களை கழிக்கின்றேன்.


பார்த்து நிற்கிறேன்

விண்மீன்கள் ஒவ்வொன்றையும் விடிய விடிய பார்த்து நிற்கிறேன்,

ஒரு முறையேனும் உன் விழிகள்

அவற்றை கடந்துச் சென்றிருக்காதா என்ற நம்பிக்கையில் !


விழி வார்த்தைகள்


விழி இரண்டே போதுமே , மொழி ஒன்றும் தேவையா

நாம் இருவரும் பேசிக் கொள்ள ?

குங்குமம்

தினம் தினம் யுத்தம் ,

தேகம் எங்கும் இரத்தம் ,

ஒரு நாள் உன் நெற்றியில் இடம் பிடிக்க

ஒவ்வொரு பிடி குங்குமமும் தினம் தமக்குள் போரிட்டு

இரத்தம் சிந்திச் சிந்தி சிவந்ததுவோ???

அத்தனைச் சிறிய சிமிழிக்குள், எத்தனை ஆசையுடன் காத்திருக்கும்

உன் விரலின் வரவை எண்ணி...


ஐயம்

இதுவரை இல்லாமல் இன்று புதிதாய்

இறப்பினை கண்டு பயம் கொள்கிறேன்,

இறந்த பின்னும் உன்னை நினைத்திடும் சுகம் கிடைக்குமா என்று தெரியாமல்...


சேலையோர நூலிழைத் தீண்டினால்

சோலைத் தென்றலே !!

உன் சேலையோர நூலிழைத் தீண்டினால் போதும்

சாலையோர வாழைக் குலையும் தலை தூக்கி பார்த்திடுமே...


வெட்கம் !

வெய்யோனே!!


நட்ட நடு நெற்றி தன்னில்

நீ இட்ட ஒரு முத்தத்தினில்

வெட்கம் கொண்டே சிவக்குது கீழ் வானம்

நீ கீழிறங்கும் போதினிலே;


கண் கொள்ளாக் காட்சி அதை காணாமல்

நீ போனாயோ

கண் காணாமல்...

நான் கரைந்தேன்

இல்லை இல்லை என நீ சொல்ல, அதை

மெல்ல மெல்ல நான் மறுத்தேன், உன் மனதை

வெல்ல வெல்ல தினம் தவித்தேன், நீ விலகிச்

செல்ல செல்ல நான் துடித்தேன்,

- ஒரு வழியாய் நீ, காதலை

சொல்ல சொல்ல நான் கரைந்தேன், எ(ன்)னை மறந்தேன்.

பொழிந்திடும் - இன்பம்

ஊற்றெனப் பெருகி,

கடலெனத் தேங்கி,

அலையென அலைந்து,

மழையெனப் பொழிந்திடும் - இன்பம்,

எரி மலையென வெடித்து, சிதறிடும் - துன்பம்.

இத்தனை அதிசயம் உன் பெயர் உச்சரிக்கும் ஓர் நொடியினிலேயே!!



மனதிற்குள் நனைகின்றேன்

நம் இருவரையும் ஓர் குடைக்குள் அடைத்து,

சுற்றிலும், திரையென மழை துளிகள் விரித்து,

தனிமையில் நம்மை,

சிறைப்பிடிக்கும் மழையினை நினைத்து, மனதிற்குள் நனைகின்றேன்.


பூ-விரல்

பூ-விரல் கொண்டு மெதுவாய்,

என் உள்ளங்கையில் நீ கோலமிட,

உன் பால் விழி பார்த்துக் கொண்டே, எங்கோ தொலைவில்,

பால்வழி அண்டம் கடந்து,

வாழ்வதாய் ஓர் உணர்வு.