காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்


விழித்துக் கொண்டு தானே இருந்தேன்,
உனை பார்த்த படியே!

இருந்தும் கவனிக்க மறந்தேன்,
எனை நோக்கி பறந்து வருவதை.

என் செவி துவாரத்தில் நுழையும் முன்
படபடத்த அதன், கண்ணாடிச் சிறகுகளின் சத்தம் மட்டுமே நான் அறிந்தேன்.

உடலை நெழித்து, செவிச் சுவர்களை அழுத்தி,
உள்ளே நுழைந்த பின்,

இருளில் தொலைந்து தடுமாறி,
தொண்டை குழியில் இடறி விழுந்து மறித்தும் போனதே, பாவம் !

முடிந்ததென நினைத்தேன்.

ஆனால்,
அதன் பிரேதம்
என் எச்சில் ஆற்றில் அடித்துச் செல்லப் படுகையில்,

சட்டென்று வெடித்ததில்,
கண்ணுக்கும் புலப்படாத சில நூறு சிறு துகள்கள் வெளியேறின.
அவை என்னென்று அந்நொடி அறிந்திலேன்.

பாலை ஒன்றில், தொலைவில் மணலைச்
சூரியன் முத்தமிடும் மாலை போலே, சிவந்திருக்கும்

இதய நிலத்தில்,
அத்துகள்களும் விழுந்தனவே.

இருண்ட இதயம் எனதே,
பார்வையால் விழி வழியே ஒளியும் அனுப்பினாய்.
ஒளி கிடைத்தது.

வறண்ட இதயம் எனதே,
புன்னகைத்தாய், எதிர் வீட்டு குழந்தையை கொஞ்சிட,
புயலோடு மழையும் தந்ததே,
நீர் கிடைத்தது.

வேரென்ன வேண்டும் இதற்கு மேல், சிறு வேர் விட்டு
சில நூறு பூச்செடிகள் மெல்ல முளைத்தனவே.

வெளி மணம் ஒன்றும் தெரியவில்லை,
மனம் முழுக்க பூக்களின் மணமே...
மூச்சு திணறிற்று; மூளை மயங்கிற்று.
தினம் நூறு பூக்கள்,
பூக்கும், தூங்கும்
வாட்டம் அறிந்ததில்லை அவை.

இனித்திருந்தேன், இனி என்ன தேவை எனக்கு,
இது போதும்,
இது போலும் இன்பம் வேறேது?
இயல்பில் இத்தனை சுகம் சாத்தியம் என்று நினைத்ததும் இல்லையே.
இன்பம் இன்பம் இன்னும் பொங்கும் இன்பம் இன்பம்...





புயல் ஒன்றும் வந்ததோ அறியிலேன். ஆனால்,
இதயம் நனைவதாய் மட்டும் நான் உணர்ந்தேன்.

மழை அல்ல. இது, மழை அல்ல.

வேருடன் நீ பறித்துச் செல்கையில்,
பாவம், வாய் பேசா பூக்கள் கண்ணீர் மொத்தம் சிந்தினவே.

நீ விதைத்தினால் நீயே பறித்துச் சென்றாயோ?
என் காதல் பூக்களை வேருடன் சேர்த்து...

நியாயம் தான். நீ செய்ததினால் இதுவும் நியாயம் தான்.

செடி ஒன்றை வேருடன் பிடுங்கிட நிலமும் என்னாகுமோ?
அதுவாய், என் இதயமும் புண்ணானதே.

சில நாட்களில் அதுவும் மறைந்திட எல்லாம் மறந்திடும் நம்பியிருந்தேன்.

சட்டென்று ஓர் நாள்,
ஏனோ என் இதயம் உறுத்திற்று,
என்னென்று நானறியேன். அறிவதும் ஏன்?

கவனிக்க நானும் நினைக்கலையே,
பூச்செடிகளின் நிலத்தில் சில முட்செடிகள் முளைத்தனவே.

இதயத்தினின்று வெட்டி எறிய இனியும் தெம்பில்லே,
விட்டு வைத்தேன், கட்டுபடுத்த நானும் முடியாமலே.

காலம் மெல்ல கரைய,
காட்டு தனமாய், முட்களும் வளர,

இதயம் கடந்து,
மேலும் கீழும், முன்னும் பின்னும்,
ஒன்றும் ஒன்றும் இரண்டென்று விரல் விட்டு எண்ணும் நொடிக்குள்,
உள்ளடங்கிய கிளைகள் என் சதை எல்லாம் கிழிய சுதந்திரமாய் விரிந்தனவே.

இரத்தம் சொட்ட சொட்ட...
இல்லை,
இரத்தம் கொட்ட கொட்ட,
என் கிழிந்த சதையும், குருதி தோய்ந்த தோலும்,
முட்களிலும், கிளைகளியும் அங்கங்கே ஒட்டி தொங்கினவே.

வேதனை இல்லை; வேதனை இல்லை.
வலி என்னை கொல்ல,
உயிர் மட்டும் ஏனோ வெட்கம் இன்றி தங்கியதே...

கிழிந்த இதயத்தில் மீண்டும் அதே வண்டு வந்து விதை தூவிடும் நம்பிக்கையோ...
காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்...

கோவணம் ஜொலிக்குது !!!


கட்டிடம் என்று கட்டி, அதனுள்
கட்டம் ஒன்று கீறி,
நீ மட்டம், மணக்கும் என்
மலம் மட்டும் என்றுச்
சட்டைப் போடாதான் ஓர்
சட்டம் போட்டே நம்மை எட்ட நிறுத்துறான்...

ஏன்டா!!
மும்பை மாடல் அழகி அளவிற்கும் உங்கள்
சாமிக்கு தமிழ் தெரியாதா?
பிறகு எதற்கடா ‘எல்லாம் அறிந்தவன்
அவன் ஒருவனே’ என்று பொய் பிரச்சாரம்?

தானே தெய்வமாக,
தன் மொழியே தெய்வ மொழியாக,
சூழ்ச்சி செய்தவனின் சொல்லுக்கு
கூட்டத்தோடு கூட்டமாய் தலை அசைத்த என்
முன்னோர் மூவாயிரம் பேராயினும்,
அத்தனை பேரையும்
சுட்டெரிக்கும் சினம் என் எட்டு முதல் கொண்டேன்...

நாளொறு கோவில் இங்கு முளைக்குது,
மூளை முடுக்கெல்லாம் இவனுங்க பாட்டு தான் ஒலிக்குது.
திருவிழான்னு தெருவெல்லாம் இவங்க கோலம் தான் நிறைக்குது,
வழி கேட்டா கோலம் போடுற பொம்பல முரைக்குது;


சாமி கோவணம் ’தக தக’னு ஜொலிக்குது, பூமியில
எத்தனையோ குடிசைக் கூரை பல் இளிக்குது...

இதெல்லாம் சொன்னாலும்,
எவனுக்கு தான் உறைக்குது?

"உசுரே போகுதே உசுரே போகுதே" - Ravanan - LYRICS

raavanan





'Usurae Poguthey' - Raavanan

Intha boomiyila eppa vanthu nee porantha,
en buthi kulla theeporiya nee vedhaicha,
adi theakku mara kaadu perusu thaan,
chinna thee kuchi osaram sirusu thaaan

adi theakku mara kaadu perusu thaan,
chinna thee kuchi osaram sirusu thaan,
oru theekuchi vizhundhu thudikkuthadi,
karum theakkumara kaadu vedikkuthadi..

usurae poguthey usurae poguthey uthattai nee konjam sulikkaiyila
Ooh... maaman thavikkuren madi-picha keakkuren
manasa thaadi en mani kuyile.

akkarai cheemaiyil nee irunthum aiviral theendida ninaikkuthadi,
akkini palam nu therinjirunthum adikkadi naaku thudikkuthadi.

udambum manasum thooram thooram, otta nenakka aagala
manasu sollum nalla solla maaya udambu keakkala.

Thaviyaa, thavichu, usur thadam kettu thiriyuthadi,
thailum kuruvi enna thalli vittu sirikkuthadi.

Intha mammutha kirukku theeruma?
adi manthirichi vitta kozhi maaruma.

en mayakkatha theethu vachi manichiruma,
chandhiranum sooriyanum,
suthi oru kotti maruguthey, sathiyamum pathiyamum ippo thala suthi kidakkuthey!!

usurae poguthey usurae poguthey uthattai nee konjam sulikkaiyila
Ooh... maaman thavikkuren madi-picha keakkuren
manasa thaadi en mani kuyile.

akkarai cheemaiyil nee irunthum aiviral theendida ninaikkuthadi
akkini palam nu therinjirunthum adikkadi naaku thudikkuthadi

intha ulagathuil ithu onnum puthusu illa
onnu rendu thappi pogum olukkathula

vithi solli vali pottaan manusa pulla
vithivillakku illaatha vithiyum illa

etta irukkum sooriyan paathu mottu virikkuthu thaamaara
thottu vidatha thooram irunthum sontha banthamum pogala


paambaa vizhutha oru paagupaadu theriyalaye
paamba irunthum nenju bayappada nenaikkalaye

en mattiyum oru naal saayalam en kannula un mugam poguma??

naan mannukkulla, un nenappu manasukkulla.

chandhiranum sooriyanum,
suthi oru kotti maruguthey, sathiyamum pathiyamum ippo thala suthi kidakkuthey!!

(usurae poguthey usurae poguthey uthattai nee konjam sulikkaiyila
Ooh... maaman thavikkuren madi-picha keakkuren
manasa thaadi en mani kuyile.

akkarai cheemaiyil nee irunthum aiviral theendida ninaikkuthadi
akkini palam nu therinjirunthum adikkadi naaku thudikkuthadi) - 2
'உசுரே போகுதே உசுரே போகுதே'

இந்த பூமியில எப்ப வ‌ந்து நீ பொற‌ந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச‌ ,
அடி தேக்கு ம‌ர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒச‌ரம் சிருசு தான்

அடி தேக்கு ம‌ர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உச‌ரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில‌
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்க‌ரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிறுந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல‌.
தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து வச்சி மண்ணிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டி மறுகுதே, சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில‌
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்க‌ரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிறுந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல‌
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல‌

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புல்ல‌
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல‌

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தம் போகல‌

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல‌
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என் மட்டையும் ஒரு நாள் சாகலாம் என் கண்ணுல உன் முகம் போகும?

நான் மண்ணுக்குள்ள, உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டி மறுகுதே, சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

(உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில‌
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்க‌ரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிறுந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.) - 2