உன் விழி கண்டு,
ஊமை இதழ் நின்று,
சுவைக் கவியும்,
மெல்ல அவிழும்.
உன் நடைக் கண்டு,
அன்னப் பேடை ஒன்று,
நெழியும்,
தயங்கி நெழியும்.
உன் மொழிக் கேட்டு,
என் வீட்டுக் கிளிப் பாட்டு,
முடியும்,
அன்றுடன் முடியும்.
வரும் வழி பார்த்து,
நீ வரும் வழி பார்த்து,
நிறையும்,
வண்ணப் பூக்கள் நிறையும்.
மிதிப்பட்டு,
உன் பாத விரல் பட்டு,
விரியும்,
அதில் சில மொட்டு விரியும்.
இத்தனையும் பார்த்து,
கண் பார்த்து,
சரியும்,
என் மனம் மெல்ல சரியும்... :)
நெற்றியில் ஓர் துளிச் சொட்டியதே!
அந்நாந்து பார்க்க யானும் முடியாமல்,தலை
குணிந்து பார்க்க தானும் முடியாமல்,
முகிலினங்கள் முகம் உரச, உயர்ந்து
நிற்கும் மரம் தன்னின் கிளையில் நின்று,
இறந்த பின்னும் தற்கொலைச் செய்யும்
எண்ணம் கொண்டு,
குதித்திடும் காய்ந்த இலைகள் மீதும்,
அவை உறங்கும் மண் துகள்கள் மீதும்,
பாலில் குழைத்த மஞ்சளினை மெதுவாய்
மெது மெதுவாய்,
தன் விரல் கொண்டுச் சூரியன்,
பூசிக் கொண்டிருந்த மஞ்சள் மாலைப் பொழுதினில்,
மணக்கும் மலர் தோட்டத்தின் மத்தியில்,
ஓர் மரத்தின் நிழலில் நீயும்,
நின் மடியில் நானும்;
வார்த்தைகள் வற்றிய வாய்கள் ஓய்ந்திருக்க,
இணை விழிகள் இமையாது,
உறைந்து கிடந்தேனே.
வழிப்போக்கன் என்று யாரும் இல்லை,
விழி(க்) கெட்டும் தூரம் எவரும் இல்லை.
சுற்றிலும் தனிமை தவழ்நது திரிய,
ஒற்றை வார்த்தை பேசாமல் அழகாய்,
மிக அழகாய்,
நீயும் சிரித்தாய்;
'நீ சிரிக்கிறாய்; வேறு காரணம் தேவையா?’,
உடன் நானும் சிரித்திருந்தேனனே !
சட்டென்று, நெற்றியில்
ஓர் துளிச் சொட்டியதே!
அதிகாலை மேகம், வாசல் தெளித்த
மழைத்துளிச் சேர்த்து,
நாம் இருவரும் வனம் வரும், நேரம் பார்த்து,
கிளை மேல் வந்து ஓர் கிளி அமர,
தலை மேல் தெளித்த மரம் அது மென்மேலும் வளர்க! வளர்க!
மனம் முழுக்க இனிக்கும் என் மன மகளே !
என் நெற்றியில் சொட்டிய நீரைக் கண்டு, கைக்
கட்டி நீயும் இருப்பதெப்படி?
உன் சேலையின் ஓர் ஓரம் பிடித்து,
என் நெற்றியின் ஈரம் துடைத்தாயே !
அதிகாலை முதல் அந்நேரம் வரை,
உன்னைச் சுற்றியிருந்தச் சேலையின்
ஓர் நுணி,
என் மீது, பட்டதே ! ஹய்யோ !
ஓ மரங்களே!
ஓர் துளி நீர் தான் உங்களால் முடிந்ததா?
ஏழ் கடல் கொணர்ந்து என் மீது கொட்டுங்களேன்...
கல் ஒன்றைக் கட்டி, என் இதயத்தை
மொத்தமாய் தூக்கி எறிந்திடுவேனே, மூச்சுத் திணறாத
பேரின்ப கடலினிலே !
Subscribe to:
Posts (Atom)