நெஞ்சு விரும்புதில்லையே....

பஞ்சு தலையணைகளை நெஞ்சு விரும்புதில்லையே,

வாழ வழி இல்லா மக்கள் இங்கு,

நாற்றம் வீசும் நடைபாதைகளை

வழி மறித்து வாழ்க்கை நடத்துகையிலே.







உயிரும் உடைமையும்

எங்கிருந்து வரும் எதிலிருந்து வரும்

என்று அறிந்தவனில்லை,

அதுஎங்கே செல்லும் எப்படி செல்லும்

அதை புரிந்தவனுமில்லை,

தன்னுடையதென சொந்தம் கொண்டாட

மறப்பதும் இல்லை,

அதற்காக

கொலையும் செய்ய

மனம் மறுப்பதில்லை

இதில்

ஒன்றின்றி ஒன்று

நிலைப்பதுமில்லை,

நிலைப்பதில்

எந்த பயனும் இல்லை…..

மகானாயினும் மந்திரியாயினும்..

மாட்டிக் கொள்ளும் வரை தான்

மதிப்பும் மரியாதையும்,

மகானாயினும் மந்திரியாயினும்... ..

பாலா(ழா)ய்ப் போகும் பணம்:

கஞ்சிக்கும் வழியின்றி தன்

குடும்பம் கதறும் சத்தம் கேட்டும்

கேளாமல்

‘கட் அவுட்’டிற்கு

பாலாபிஷேகம் செய்கிறான்,

தன்னை அறியாத தலைவனுக்காக

தன் தலை விதி

மறந்தே!!!!!!!

பாழாய் போகிறதே

மூடணின் பணம்

பாலாய்

போகிறதே!!!!!!!!!!!!!