தானம்!!!

பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் வேட்டி,
ஒரு கை கிழிந்தும் இன்னொரு கை தோல் பட்டை வரை மடித்தும் விடபட்ட சட்டை,

லேசாய் வளைந்த ஒரு தடி,
டீ சிந்தி சிந்தி அழுக்கான தாடி, அதில்
இரண்டு நாட்களுக்கு முன் குடித்த 
சாம்பாரில் இருந்து ஒட்டிக் கொண்ட பருப்பு, அதை 
அரைகுறையாய் துடைத்த அழுக்கு கைகளுமாய் 

ஓர் முதியவர்.

புறப்படும் முன் அலறிய ட்ரெய்ன்ல், அடித்து பிடித்து ஏறி
அழு குரலில் நடு நடுங்கி
அனா கேட்டார்,

சட்டை பையை இரகசியமாய் தடவினேன்.

பசி பட்டினி என்று புலம்பினார்,
சட்டை பைக்குள் சலனமின்றி கையை விட்டேன்.

சட்டென்று காலில் விழுந்தார்,

விரலிடையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை பின் தள்ளி,
பதற்றமின்றி தேடி எடுத்த ஒரு ரூபாயை, 
அவர் கையில் விரல் படாமல் பக்குவாய் கொடுத்தேன்.

உழைக்க சக்தி இல்லா 
ஓர் ஏழை முதியவருக்கு உதவிய பெருமிதத்துடன்
ஊராரின் சுயநல போக்கை தொடர்ந்து சாடினேன்.

Lyrics: என்னோடு நீ இருந்தால்... I (2014) - Kabilan | A R Rahman | Sid Sriram | Sunitha Sarathy

காற்றைத் தரும் காடுகளே வேண்டாம்
ஓ, தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண, உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை
தேவை எல்லாம் தேவதையே...

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்.

உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலைத் தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் கேக்கி வைப்பேனே
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா,
பூணைத் தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்க்குமா?
முதலை குலத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்