நீ மறந்தால்...

சுவாசத்தின் சுமை தாழாமல் என்

வலப்பக்க நுரையீரல் கீழே விழுந்து உடையுமடி

இடப்பக்க இதயத்தினில் நீ இருந்து சமண் செய்ய மறந்தால்...


சபதம் நிறைவேறியது !!

"என்னை எரித்த உன்னை சும்மா விட மாட்டேன்,

உன் மகனை வைத்தே உன்னை எரிப்பேன் இது என் மீது சத்தியம்!!...";

-சபதம் நிறைவேறியது என்று

புன்னகைக்கிறது 'புகையிலை',

கல்லரை ஓரமாய் கரும் புகை வீசி...