இனிய நீயும் நானும்

மூக்கின் நுனி
முதலாம் கனி;

பூவின் மடல்
பூவை உடல்;

ஈர முகம்
தீரா சுகம்;

பட்டுத் துணி
ஈரிமைகள் இனி;

பெண்ணின் விழி
வெள்ளிப் பனி;

மடியில் நானும்
மனதில் நாணம்;

மோக முத்தம்
யாக வெப்பம்;

தென்றல் வீசும்
தோள்கள் பேசும்;

தேன் சுரக்கும்
நா மணக்கும்

ஊமை கழுத்து
உயிர்மெய் எழுத்து;

சங்கின் தன்மை
விழியின் வெண்மை;

பேசும் புருவம்
கூட்டும் கர்வம்;

நெற்றித் திலகம்
அழகின் கழகம்;

மேக மெய்கள்
சேரும் கைகள்;

முனகள் சத்தம்
மூச்சின் சந்தம்;

பற்கள் பதியும்
பாதம் அதிலும்;

முன்னும் பின்னும்
முறிந்திட சொல்லும்;

இதழ்கள் தவழும்
இடையும் துவளும்;

வார்த்தை போதும்
வார்த்தாய் யாதும்;

இனிய

நீயும் நானும்
வானின் கானம்.