உழவு

அரசாங்கம் சீர் படனும்
விளைநிலமெல்லாம் அரசுடைமை ஆகனும்.

வீட்டுக்கொருவன் உழுது தரனும்
உழுபவனுக்கு உணவே ஊதியம் ஆகனும்.

வயலிலும் வெயிலிலும் அவன் காய்தலானாலும்
வாழ்விலும் வளத்திலும் அவன் தாழ்தலாகாது.

பட்டனத்தான் போற்றிடும் பட்டாளத்தானும்
போற்ற வேண்டும் இந்த படி அளப்பானை.

உழவன் வாழ்விற்கு உத்திரவாதம் வரனும்
கிழவன் ஆயினும் அவன் மதிக்க படனும்.

2BHK  வீடு கட்ட உலக ஜனம் வேறு இடம் தேடனும்
இன்றேல், விளைநிலத்தில் கட்டிய வீட்டின் 'K'இல் சமைக்க கல்லும் கரித் துண்டுமே மிஞ்சிடும்.

No comments:

Post a Comment