வீழ்ந்திடும் ஒவ்வொருத் துளியுடன் நீயும்,
கரைந்துச் செல்வதைக் கண்டு மேலும்,
பொங்கும் கண்ணீரை நானும்
என் செய்து நிறுத்து வேனோ?
பால் மழைப் பொழிந்து,
துளி பொழுதில் உறைந்து,
மண் மொத்தமும் மறைந்து,
தேகம் முழுதும் குளிர்கையில்,
தோளில் சாய்ந்து உறங்கினாய்,
தூக்கம் என்று மயங்கினாய்.
மழையும் பொழியவில்லை,
குயில் கூச்சல் புரியவில்லை.
சலனமின்றி விழித்தேனே,
உன் உறக்கம் கண்டு வழிந்தேனே!
கால் முளைத்த காலம் அங்கேயே
முடமாய் போய் இருக்க கூடாதா?
வேகம் கொண்டு நேரம் ஓடியும்,
உன் தேகம் மட்டும் அசையாது அமைந்ததுவே!
கதறிக் கதறி அழத் துடித்தேன்,
ஊமையாய் ஏனோ நெஞ்சைப் பிடித்தேன்.
தடிப்பிடித்து அடி எடுத்து வைத்திடும் கிழவன் விடுத்து
ஏன் சென்றாய் நரை முடிக் கிழவியே?
எனக்கென நிகழும் எக்காரியமும்,
உன்னுடன் ஒன்றாய் நிகழ்ந்திடவே,
உடன் நானும் விழுந்தேனே,
கனவுக் கலைந்து எழுந்தேன!!!
நிகழா அனைத்தும் நிகழாதே போயினும்,
சத்தமின்றி கண்ணீரும் கண்ணத்தை நனைத்திட,
வீழ்ந்திடும் ஒவ்வொருத் துளியுடன் நீயும்,
கரைந்துச் செல்வதைக் கண்டு மேலும்,
பொங்கும் கண்ணீரை நானும்,
என் செய்து நிறுத்துவேனோ?