அத்தே!!


தேகம் நொந்து,
சோகம் பலக் கொண்டு,
வருடம் ஒன்று முழுதாய் முடிய
இரு மாதம் இன்னும் குறைய,
சுமந்தாய், உன் வயிறுடன் மனதும் நிறைய.

சொல்லில் அடங்கா பிணிக் கொண்டு ஈந்தாய்,
அது வரை மண்ணில் இல்லா அழகு மகள் இவளை.

ஒரு முறை நீ சுமந்தாய் அவளை, போதும்.
இனி தினம் தினம் நானே சுமப்பேனாம்.

பிணிப் பற்றி பயம் வேண்டாம்,
சூரியனும் பனியும் போலே, அவள்
சிரிப்பும் என் தவிப்பும்;
எதிரெதிர் நிற்கையில் சலனமின்றி உறுகியே ஓடிடுமே.

இனியும் உனக்கு கவலை வேண்டாம் அத்தே,
என் உயிர் பிரியும் வரை அவள் கண்கள்,
கண்ணீரை கண்டிடாதே!!!