அவள் அருகில் வருகிறாளென்று

காற்று கடத்திச் செல்லும் பொற்சிலை போல் திருமகள்,

பட்டினும் மெல்லிய அவள் கூந்தலை,

வீணை நரம்பென எண்ணி,

காற்றின் விரல்கள் மீட்டிட

தோன்றும் இசைக் கேட்டு என் நெஞ்சம் சொல்லும்,

தங்க ரதம், அவள் அருகில் வருகிறாளென்று...

இறகினும் மெல்லிய:

இணைவதற்காகவே இடைவெளிகளுடன்,
கை விரல்கள் -
உன் வெட்கம் மறைக்கும் திரைகள்.

‘யோகா’ பயிற்சி செய்தனவோ என்னவோ நானறியேன்,
உடல் முழுதும் வளைத்து சாகசம் புரிந்து,
உன் விரல்களிலும் கைகளிலும் இடம் பிடித்தன மோதிரமும் வளையளும்.

மயில்,
தோகை விரிப்பது போல்,
தானும் தோகை விரித்தாடும் மாட புறாவின்
சிறகில் இருந்து உதிர்ந்த,
இறகினும் மெல்லிய
உன் விரல் பிடித்த படி,கண்ணாடித் தொட்டிக்குள் முத்தமிடும் வண்ண மீன்களை
கண்டு கழிக்கும் நொடியினை எண்ணியே
நாட்களை கழிக்கின்றேன்.


பார்த்து நிற்கிறேன்

விண்மீன்கள் ஒவ்வொன்றையும் விடிய விடிய பார்த்து நிற்கிறேன்,

ஒரு முறையேனும் உன் விழிகள்

அவற்றை கடந்துச் சென்றிருக்காதா என்ற நம்பிக்கையில் !


விழி வார்த்தைகள்


விழி இரண்டே போதுமே , மொழி ஒன்றும் தேவையா

நாம் இருவரும் பேசிக் கொள்ள ?