ஆசை கொண்டேன்...

ஆண்டவனாய் பிறந்திருக்க ஆசை கொண்டேன் ,

கடற்கரை மணலில் ,

உன் கால் சுவடுகளை அழித்திடும் அலைகளை ,

அசையாமல் அப்படியே நிறுத்தி வைத்து உன் சுவடுகள் அருகில் நானும் சிலையாய் போக...


வீணாய் கழித்தேனடி...

ஐயிரண்டு மாதங்கள் வீணாய் கழித்தேனடி ,

நீ சுவாசித்த காற்றினை சுவாசிக்க முடியாமல் ,

கருவறையிலே...


உதடுகள் முணுமுணுக்குதே...

உதடுகள் ஓயும் வரை, உன் பெயரை உச்சரிக்க முடிவு செய்தேன்,

மண்ணுக்குள் புதைக்கும் பொழுதும் என் உதடுகள் முணுமுணுக்குதே...


நீ மறந்தால்...

சுவாசத்தின் சுமை தாழாமல் என்

வலப்பக்க நுரையீரல் கீழே விழுந்து உடையுமடி

இடப்பக்க இதயத்தினில் நீ இருந்து சமண் செய்ய மறந்தால்...